மன்னார் பேசாலை பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு மரணித்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது

Kanimoli
3 years ago
மன்னார் பேசாலை பகுதியில் ஒருவர் தாக்கப்பட்டு மரணித்த சம்பவம் தொடர்பாக மூவர் கைது

து செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ள நிலையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பேசாலை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (08) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொழும்பைச் சேர்ந்த சுப்பையா ஆறுமுகம் சங்கர் (வயது - 40) என்பவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இவர் கிளிநொச்சிக்கு தொழிலுக்குச் சென்ற வேளையில், ஜெயபுரத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்த பின் பேசாலை பகுதிக்கு தொழிலுக்கு குடும்பத்துடன் சென்று வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவ தினத்திற்கு முதல் நாள் இறந்த நபரின் மனைவி கொழும்புக்குச் சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் ஒன்றாக தொழில் புரிபவர்கள் ஒன்று சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட கைகலப்பில் குறித்த குடும்பஸ்தர் தாக்குதலுக்கு உள்ளாகி மரணித்துள்ளார்.

இந்தச் சம்பவமானது சில தினங்களுக்கு முன் வளிமாசு காரணத்தால் ஏற்பட்ட இயற்கை குளறுபடியால் நடந்திருக்கலாம் என எவரும் கணக்கில் எடுக்காத நிலையில், மறுநாள் (09) காலையே காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்டதாகவும், பின் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த நபர் இறந்ததாகவும் மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனைகளின் பின் உறவினர்களிடம் சனிக்கிழமை(11) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்கொலை தொடர்பாக மூவர் சந்தேகத்தின் நிமித்தம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தலைமறைவாகிய ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4