துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோ கிராம் பால் மா விடுவிப்பு!

Mayoorikka
3 years ago
துறைமுகத்தில் சிக்கியிருந்த  4 இலட்சம் கிலோ கிராம் பால் மா விடுவிப்பு!

118 மில்லியன் ரூபா வங்கி உத்தரவாதத்தின் பேரில் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோ கிராம் பால் மாவை சம்பந்தப்பட்ட நிறுவனம் விடுவித்துள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி பெறாத காரணத்தினால் 37 நாட்களாக துறைமுகத்தில் பால் மா கையிருப்பு வைக்கப்பட்டிருந்ததால் கப்பல் நிறுவனமும் துறைமுகமும் 96 லட்சம் ரூபாய் தாமதக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருந்தது.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் விவாதம் நடைபெற்றது.

இதேவேளை, கடந்த 9ஆம் திகதி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலையை 1240 ரூபாவாக அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4