நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் இங்கிலாந்து அணி தலைவர் ஜாஸ் பட்லர்

Prasu
3 years ago
நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார் இங்கிலாந்து அணி தலைவர் ஜாஸ் பட்லர்

நவம்பர் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை இங்கிலாந்து அணியின் தலைவர் ஜாஸ் பட்லர் வென்றுள்ளார்.

ஐசிசியின் சிறந்த வீரர் விருதுக்கு பட்லர், அடில் ரஷித், ஷாஹீன் அஃப்ரிடி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார்கள். இந்நிலையில் டி20 உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி தலைவர் ஜாஸ் பட்லர், நவம்பர் மாதத்துக்கான சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கிண்ண போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 47 பந்துகளில் 73 ஓட்டங்களும் அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக 49 பந்துகளில் 80 ஓட்டங்களும் எடுத்து இங்கிலாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தார் 32 வயது பட்லர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4