பேராதனை முன்னாள் உபவேந்தரை தாக்கிய சம்பவம்: 10 பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்

Prathees
2 years ago
பேராதனை முன்னாள் உபவேந்தரை தாக்கிய சம்பவம்:  10 பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 10 மாணவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய மாணவர்கள் கண்டி நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய பத்து மாணவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீனித் விஜேசேகர உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!