இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிகை

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு பற்றியோ அல்லது பொதிகள் வந்துள்ளதாக கூறியயோ வரும் அழைப்புக்கள், குறுந்தகவல்களை உரிய வகையில் ஆராயாமல் எவரினதும் வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடவோ அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்பவோ வேண்டாமென இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு பொதுமக்களை கோரியுள்ளது.
வெளிநாட்டு தொழில்வாய்ப்புக் காக அனுப்புவதாக உறுதி வழங்கியும், பல்வேறுப்பட்ட பொருட்கள் உள்ளிட்ட பொதிகளை பெற்றுக் கொள்வதற்காக சுங்க வரி செலுத்த வேண்டியுள்ளதாக கூறியும் நிதி மோசடியில் ஈடுப டுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைத்தளங்களூடாக போலி தகவல்களை வழங்கி, நிதி மோசடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளுக்கமையவே இந்த அறிவுறுத்தலை மத்திய வங்கி விடுத்துள்ளது.
எனவே உரிய முறையில் ஆராயாமல் எவரினதும் வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடவோ? அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்பவோ? வேண்டாமென இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு பொதுமக்களை கோரியுள்ளது.
இது தொடர்பில் கிடைக்கும் தொலைபேசி அழைப்பு மற்றும் குறுந்தகவல் தொடர்பில் 0112 477 125 அல்லது 0112 477 504 என்ற இலக்கங்கள் ஊடாக நிதி புலனாய்வு பிரிவுக்கு அறியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



