டிசம்பருக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிய ஒப்புதல் இல்லை- ரொயட்டர்ஸ்

Kanimoli
1 year ago
டிசம்பருக்குள் இலங்கைக்கு சர்வதேச நாணய நிதிய ஒப்புதல் இல்லை- ரொயட்டர்ஸ்

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புக்காக, இந்த ஆண்டு இறுதிக்குள் முறையாக ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கமுடியாது என்று ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள், ஒப்பந்தத்திற்கு சர்வதேச நாணய  ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கூறியிருந்தது.
எனினும் அண்மைய மாதங்களில் முன்னேற்றம் மெதுவாக உள்ளது.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி வரை நீடிக்கப்படலாம் என்பதை, இலங்கையின் நிதியமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தாம் நிதிகளை வழங்குவதற்கு முன்னர், கடனாளர்களிடமிருந்து முன் நிதியளிப்பு உத்தரவாதங்களைப் பெற வேண்டும்; மற்றும் பொது வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று இலங்கையிடம் வலியுறுத்தியிருந்த சர்வதேச நாணய சபை, இலங்கையின் மூன்று முக்கிய இருதரப்பு கடனாளிகளான சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவை உள்ளடக்கிய கூட்டுப் பேச்சுக்களின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி;யுள்ளது.
எனினும் இன்னும் இந்த முன்னேற்றங்களை இலங்கை அடையவில்லை.
இந்தநிலையில், 2022  டிசம்பர் 22 வரையான தமது கூட்டங்களுக்கான தமது நாளாந்த செயற்பாடுகளில் இலங்கையைப் பற்றி, சர்வதேச நாணய நிதியம் எதனையும் குறிப்பிடவில்லை என்று ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!