தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானம்

Prasu
3 years ago
தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானம்

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிட்டு தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் திணைக்களத்தில் பல மாதங்களாக கிடைக்காததால் தற்காலிகமாக செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு அந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனைவருக்கும் முறையாக அட்டை அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என வீரசிங்க தெரிவித்தார்.

திணைக்களத்திற்கு 500,000 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகள் கிடைத்துள்ளதாகவும் மேலும் 500,000 அட்டைகள் ஜனவரி மாதத்தில் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுவதாகவும், அட்டைகள் தட்டுப்பாடு காரணமாக ஒரு நாள் சேவையின் ஊடாக 50 அனுமதிப்பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். 

அடுத்த வாரத்தில் இருந்து எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கப்படும்.

நாளாந்தம் சுமார் 1700 சாரதி அனுமதி அட்டைகள் வழங்கப்படுவதாகவும், வருடாந்தம் சுமார் 08 இலட்சம் கார்ட் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4