வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

Nila
3 years ago
வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளுக்கு பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி இவ்வருடம் சுமார் 1800 வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளில் வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, திருமணப் பதிவாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் தயாராகி வருவதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4