காலி மாவட்டத்தில் குற்றச்செயல்களை முன்னெடுப்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன

Prathees
1 year ago
காலி மாவட்டத்தில் குற்றச்செயல்களை முன்னெடுப்பவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன

காலி பிரதேசத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வரும் 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருந்து குற்றச்செயல்களை நடத்துகின்றனர் என பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களில் அஹுங்கல்ல, பலபிட்டிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஏறத்தாழ பதினொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அம்பலாங்கொடை பொல்வத்த பிரதேசத்தில் காலி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அம்பலாங்கொடையில் ஸ்தாபிக்கப்பட்ட குற்றப் பிரிவு குற்றச் செயல்களை துரிதமாக முறியடிக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றது.

ஒரு உதவிக் காவல் கண்காணிப்பாளரின் கீழ் இயங்கும் அந்தப் புதிய பிரிவில் 30 காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!