உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா - முக்கிய கட்டிடங்கள் சேதம்

Prasu
3 years ago
உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா - முக்கிய கட்டிடங்கள் சேதம்

அண்டை நாடான உக்ரைனை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி போரை தொடங்கியது. 

மிகப்பெரிய படைபலத்தின் மூலம் உக்ரைனை எளிதில் அடிபணிய வைத்துவிடலாம் என எண்ணி போரை தொடங்கிய ரஷியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷிய படைகளை துணிவுடன் எதிர்த்து நிற்கிறது. 

அதே வேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே செல்கிறது. 

ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில்,  தலைநகர் கீவ்வில் ரஷியா நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் ஐந்து முக்கிய கட்டிடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

பல ட்ரோன்களை இடைமறித்து உக்ரைன் படைகள் முறியடித்துள்ளன. இந்த தாக்குதல்களில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியிருக்கிறது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4