மருத்துவர்களின் ஓய்வு வயதை மாற்றியமைக்கும் வர்த்தமானி அறிவிப்பு

Prathees
1 year ago
மருத்துவர்களின் ஓய்வு வயதை மாற்றியமைக்கும் வர்த்தமானி அறிவிப்பு

மருத்துவர்களின் கட்டாய ஓய்வு வயதை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சிறப்பு மருத்துவ அலுவலர், அரசு மருத்துவ அலுவலர், பல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் அரசுப் பதிவு மருத்துவ அலுவலர் ஆகிய பதவிகளின் கட்டாய ஓய்வு வயது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்திருத்தத்தின்படி ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவர்கள் டிசம்பர் 31ம் திகதிக்கு முன் ஓய்வு பெற வேண்டும்.

62 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 63 வயது நிறைவடைந்ததும், 61 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 62 வயது பூர்த்தியடைந்ததும் ஓய்வு பெற வேண்டும்.

60 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 61 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும், 59 வயது நிறைவடைந்த மருத்துவர்கள் 60 வயது நிறைவடைந்தவுடன் ஓய்வு பெற வேண்டும் என்றும் புதிய திருத்தம் கூறுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!