உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்த மனுக்களை ஜனவரி விசாரணைக்கு எடுக்க உத்தரவு!

Mayoorikka
3 years ago
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்த மனுக்களை ஜனவரி விசாரணைக்கு எடுக்க உத்தரவு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடக் கோரி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தாக்கல் செய்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தாக்கல் செய்த 2 ரிட் மனுக்களை ஜனவரி 18ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த திங்கட்கிழமை, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரால் ஒரு மனுவும், சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அநுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரால் மற்றைய மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4