பாடசாலைகளைச் சுற்றிய பகுதியில் போதைப்பொருள் சோதனை: 75 பேர் கைது

Prathees
3 years ago
பாடசாலைகளைச் சுற்றிய பகுதியில் போதைப்பொருள் சோதனை: 75 பேர் கைது

மேல் மாகாணத்தில் உள்ள 122 பாடசாலைகள் தொடர்பில் பல்வேறு வகையான போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையில் 75 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 கிராம் 375 மில்லிகிராம் ஹெரோயின், 1 கிராம் 522 மில்லிகிராம் ஐஸ், 2 கிலோ 148 கிராம் கஞ்சா மற்றும் 10 மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4