கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் நாட்டில் உயிரிழந்த கிரிதரனின் சடலம் நாட்டிற்கு வந்தடைந்தது!

Mayoorikka
3 years ago
கனடா செல்ல  முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் நாட்டில் உயிரிழந்த கிரிதரனின் சடலம் நாட்டிற்கு வந்தடைந்தது!

அண்மையில் கப்பல் மூலமாக கனடா செல்ல  முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் இன்று பிற்பகல்  விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

சட்டவிரோதமாக கனடா செல்ல  முற்பட்டு,  வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் தியாகி அறக்கட்டளை தியாகேந்திரன் வாமதேவவின்  முயற்சியாலும் நிதியுதவியாலும் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

t

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4