நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கி பலி

Kanimoli
3 years ago
நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கி பலி

நீராடச் சென்ற பல்கலைக்கழக மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் வீரவில ஏரியின் மதகுக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.

இம் மாணவன் ஜயவர்தனபுர முதலாம் வருட மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தைச் சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட மாணவர்கள் குழு திஸ்ஸமஹாராம தெபரவெவ பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு மாணவனின் வீட்டுக்கு சென்று திரும்பி வந்து கொண்டிருந்த போது இடையில் குறித்த ஏரியில் நீராடச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவன் அங்கு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலம் நேற்று (17) இரவு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பதுளை தெமட்டவெல்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4