அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் குறைப்பு !

Prabha Praneetha
3 years ago
அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் குறைப்பு !

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதனை அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டது.

 

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4