நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்

Reha
3 years ago
நாட்டின் பல இடங்களில் அவ்வப்போது மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம்

கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் சில இடங்களில் 75மி.மீ. அளவில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4