அதிக விலையுள்ள முட்டைகளை நிராகரிக்க வேண்டும் - உற்பத்தியாளர் சங்கங்கள் கோரிக்கை

Prathees
3 years ago
அதிக விலையுள்ள முட்டைகளை நிராகரிக்க வேண்டும் - உற்பத்தியாளர் சங்கங்கள் கோரிக்கை

பண்ணையில் இருந்து ஒரு முட்டையை 50 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து சங்கங்களும் இணைந்து நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் மொத்த வியாபாரிகள் பண்ணையிலிருந்து 50 ரூபா விலைக்கு எடுத்துச் செல்லும் முட்டைகளை 53 ரூபாவுக்கு சில்லறை விற்பனை நிலையங்களுக்கு விற்பனை செய்யுமாறு இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.

எனினும், முட்டை தட்டுப்பாடு காரணமாக பல பேக்கரி உரிமையாளர்கள் கேக் தயாரிப்பில் இருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4