கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் தொடர்பான முக்கிய அறிக்கை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம்!

Mayoorikka
3 years ago
 கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் தொடர்பான முக்கிய அறிக்கை நாளை  குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம்!

கொலைசெய்யப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கை, கால்கள் கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் விட்டுச் செல்லப்பட்ட இடத்திலும் சடலத்திலும் பதிந்திருந்த  கைரேகைகளின் அறிக்கை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மகிழூந்து மற்றும் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகைகள் தற்போது பகுப்பாய்வு செய்யப்பட்டு, குற்றப் பதிவுப் பிரிவில் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் பொருத்தப்படும்.

இதேவேளை, எதிர்காலத்தில் தினேஷ் ஷப்டரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, அவரது மனைவியிடமும் வாக்குமூலம் பெறப்பட உள்ளது. 

இதனிடையே, படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் நேற்று பொரளை மயானத்தில் இடம்பெற்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4