புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலத்தை வெளியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Mayoorikka
3 years ago
புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலத்தை வெளியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நேற்று நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் நடைபெற்றது.

இந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 334,698 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

இதேவேளை, கல்கமுவ எஹெதுவெவ பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் பொறுப்பாசிரியர் ஒருவர் தவறான வினாத்தாளை மாணவர்களுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்எம்டி தர்மசேன தெரிவித்துள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழு இன்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4