பாடசாலை மாணவர்களுக்கு சீனாவிலிருந்து 5 பில்லியன் ரூபா பெறுமதியான சீருடைகள்

Prathees
3 years ago
பாடசாலை மாணவர்களுக்கு சீனாவிலிருந்து 5 பில்லியன் ரூபா பெறுமதியான சீருடைகள்

இந்நாட்டிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சீன அரசாங்கம் 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலைச் சீருடைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

மூவாயிரத்து பன்னிரண்டாயிரத்து ஐந்நூற்று தொண்ணூற்று ஆறு மீற்றர் துணி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாகவும், துணியின் முதல் பாகம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்நாட்டிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

இந்த நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் சீருடைக்காக வழங்கப்பட வேண்டிய துணி கையிருப்பில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்கு சீனாவினால் வழங்கப்பட்ட துணி கையிருப்பு போதுமானது.

சீருடைகளின் முதல் பாகத்தை ஏற்றிய கப்பல் ஜனவரி 6 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

இலங்கை மாணவர்களுக்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான தூரத்தை விட சுமார் பத்து மடங்கு நன்கொடை அளித்துள்ளதாகவும், அதில் பெருமிதம் கொள்வதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4