இன்றைய வேத வசனம் 20.12.2022: கோபம் என்பது மிகப்பெரிய பாவம். அந்த துர்குணத்திலிருந்து தேவன் நம்மை விடுதலையாக்கி

Prathees
1 year ago
 இன்றைய வேத வசனம் 20.12.2022: கோபம் என்பது மிகப்பெரிய பாவம். அந்த துர்குணத்திலிருந்து தேவன் நம்மை விடுதலையாக்கி

ஒருமுறை ஒரு பாம்பு ஒரு சமையலறையில் நுழைந்து விட்டதாம்.

அந்தப் பாம்பு சமையலறைக்குள் ஊர்ந்து சென்று கொண்டிருக்கும் போது, ஒரு கூர்மையான கத்தி அதை கீரி விட்டதாம்.

அதை உணர்ந்த பாம்பு, நீ என்னையே கீரி விட்டாயா? என்றுக்கூறி கோபத்துடன் கத்தியை கொத்தியதாம். கொத்திய பாம்பின் வாய் கிழிந்தது போய்விட்டதாம்.

பாம்பு மீண்டும் என் வாயைக் கிழிக்கும் அளவுக்கு உனக்கு தைரியம் வந்துவிட்டதா? என்று சொல்லி தன் உடம்பினால் அந்தக் கத்தியை இறுக்க ஆரம்பித்ததாம்.

அடுத்த நிமிடமே அந்தப் பாம்பு துண்டு துண்டாக போனதாம்!! இறுதியில் அந்தப் பாம்பு துடிக்க துடிக்க இறந்து போனதாம்!

ஆமாங்க, நாம் வாழ்க்கையில் கூட நாம் ஒவ்வொரு முறையும் கோபப்படும் போது, நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம்.

இன்று கோபப்படுதலை குறித்து பரிசுத்த வேதாகமம் நமக்கு என்ன கற்றுத்தருகிறது என்பதை பார்ப்போம்.

உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். (பிரசங்கி 7:9). என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.

மற்றொரு வேத வசனம் சொல்லுகிறது:-
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி. (நீதிமொழிகள் 12:16
ரொம்ப சீக்கிரமாகவே எல்லா விஷயங்களுக்கும் சட் சட் என்று நமக்கு கோபம் வருகிறதுயென்றால், வேதம் நமக்கு கொடுக்கும் பெயர் மூடன் அல்லது முட்டாள்.

சரி, இப்ப நமக்கு ஒரு கேள்வி வரும்! வாழ்க்கையில் கோபமே படக்கூடாதா? வாழ்க்கையில் கோபப்படாமல் எப்படி வாழ முடியும்? இயேசு கிறிஸ்து கூட சில இடங்களில் கோபப்பட்டாரே? அப்படின்னு நீங்க கேட்கலாம்!! அது ஒரு நியாயமான கேள்விதான்.

வேத புத்தகத்தில் நீங்க பார்த்தீங்கன்னா சில இடங்களில் இயேசு கிறிஸ்துவே கோபப்படுகிறார். அவர் ஏன் கோபப்படுகிறார்? யார்கிட்ட கோபப்படுகிறார்? என்ற பின்னணியை நீங்க பார்த்தீங்கன்னா
அவர் ஒவ்வொரு கோபத்திற்கு பின்னாலும் தேவனுடைய நீதி இருக்கும்! தெய்வீகமான ஞானம் இருக்கும் அது அத்தியாவசியமான கோபம்!

ஆனால் நாம் படுகிற கோபம் அனாவசியமான கோபம். வெறுப்பினால் உண்டாகிற கோபம், பொறாமையினால் உண்டாகிற கோபம் அது வேண்டாம்! அது நம்முடைய வாழ்க்கையை அழித்து விடும்!
ஆவிக்குரிய உலகத்திலேயே நம்மை சுற்றி நடக்கும் அநியாயங்களை நாம் பார்க்கும் போது, தட்டிக்கேட்கும் படி போயிட்டு அதுவே ஒரு பெரிய பிரச்சனையில் வந்து முடிஞ்சி, மற்றவர்களுடைய சமாதானத்தையும் கெடுகிறது என்றால், ஞானத்தோடும் விவேகத்துடனும் ஒரு பிரச்சனையை கையாள பழகுற வரைக்கும், அநியாயத்தை சகித்துக் கொள்வது ரொம்பவே நல்லது.

அதனால் வரும் நஷ்டத்தையும், இழப்பையும் சகித்துக் கொள்வது ரொம்பவே நல்லதுங்க!
எந்த விதத்துலயும் வாக்குவாதம்பண்ணுதல், சண்டைபண்ணுதல் குற்றம் பாவம் என்று பவுல் கொரிந்தியர் புத்தகத்தில் தெளிவாய் நமக்கு கற்றுக் கொடுக்கிறார்! (1கொரிந்தியர் 6:7)
கோபம் என்பது மிகப்பெரிய பாவம். அந்த துர்குணத்திலிருந்து தேவன் நம்மை விடுதலையாக்கி, சாந்த குணத்திற்கு நேராக உங்களையும், என்னையும் வழி நடத்துவாராக! ஆமென்! அல்லேலூயா!!