நுவரெலியாவில் ரகசிய பொலிஸார் எனக் கூறி சோதனையில் ஈடுபட்ட உடப்புசல்லாவையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது
Prasu
2 years ago

நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு பின்பகுதியில் உள்ள பூங்கா வீதியில் பொது மக்களிடம் தாங்களை ரகசிய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எனக்கூறி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த உடப்புசல்லாவையை சேர்ந்த மூன்று இளைஞர்கள் 19 ஆம் திகதி திங்கட்கிழமை மாலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றன.



