ரஸ்யா பெலாரஸுடனான தங்களது எல்லைப் பாதுகாப்பை உக்ரைன் பலப்படுத்த முடிவு

Kanimoli
1 year ago
ரஸ்யா பெலாரஸுடனான தங்களது எல்லைப் பாதுகாப்பை உக்ரைன் பலப்படுத்த முடிவு

ரஸ்யா புதிய தாக்குதலை முன்னெடுக்கலாம் என்ற அச்சத்தில் பெலாரஸுடனான தங்களது எல்லைப் பாதுகாப்பை உக்ரைன் பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

திடீரென்று பெலாரஸ் அதிபரை சந்திக்கும் பொருட்டு விளாடீர் புடின் புறப்பட்டு சென்றதாக வெளியான தகவலை அடுத்தே உக்ரைன் எல்லைகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளது.

பெலாரஸ் நாடானது ரஸ்யா மற்றும் உக்ரைனுடன் தங்கள் எல்லையை பகிர்ந்து வருகிறது. மேலும், பெலாரஸ் நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள ரஸ்ய துருப்புகள் அங்குள்ள இராணுவத்துடன் இணைந்து கூட்டுப்பயிற்சியும் மேற்கொள்ளும் என ரஸ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது.

விளாடிமிர் புடினின் இந்த அதிரடி நகர்வால் உக்ரைன் தரப்பு கதிகலங்கிப் போயுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

மட்டுமின்றி, பெலாரஸ் நேரடியாக போரில் ஈடுபடவில்லை என்றாலும், பெப்ரவரியில் படையெடுப்பைத் தொடங்க ரஸ்ய துருப்புக்கள் அதன் பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதித்தது.

ஆனால் சமீப நாட்களாக தங்கள் ஆதரவை வெளிக்காட்ட ரஷ்யா கடுமையான அழுத்தம் அளித்து வருகிறது. இதன் ஒருபகுதியகவே புடின் திடீர் விஜயமாக பெலாரஸ் சென்றுள்ளார் என்ற கருத்தும் வெளியானது.

ஆனால், அவ்வாறான சூழலை ரஸ்யா ஒருபோதும் முன்னெடுக்காது என முக்கிய அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு விளாடிமிர் புடின் பெலாரஸ் சென்றுள்ளார்.

இரு நாட்டு தலைவர்களும் சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளனர். இருவரும் ஆலோசனை மேற்கொண்டதன் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!