கொழும்பு துறைமுக நகரத்திற்கு 03 வகைகளின் கீழ் புதிய விசா

Prathees
3 years ago
கொழும்பு துறைமுக நகரத்திற்கு 03 வகைகளின் கீழ் புதிய விசா

கொழும்பு துறைமுக நகருக்கு மூன்று பிரிவுகளின் கீழ் புதிய விசாக்களை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கொழும்பு துறைமுக நகரத்தில் நிறுவப்படவுள்ள சர்வதேச வர்த்தகம், கப்பல் போக்குவரத்து மற்றும் செயற்பாடுகள், நிதி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு சேவைகளுக்காக வரவிருக்கும் முதலீட்டாளர்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினருக்கு விசாக்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் விவகாரங்களுக்கான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4