இன்றைய வேத வசனம் 21.12.2022: அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்

Prathees
3 years ago
இன்றைய வேத வசனம் 21.12.2022:  அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்

ராஜாவாகிய தாவீதை மீண்டும் எருசலேமுக்கு அழைத்துவர, யூதாவின் மனுஷர் முந்திக்கொண்டார்கள்.
மட்டுமல்ல, ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்மட்டும் வந்தபோது, யூதா கோத்திரத்தார்: ராஜாவுக்கு எதிர்கொண்டுபோய், ராஜாவை யோர்தானைக் கடக்கப்பண்ண கில்கால்மட்டும் வந்தார்கள். (2 சாமுவேல் 19:15)

எருசலேம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வரவேற்பு மயம். ராஜாவுக்கு எதிர்கொண்டு போக, ஒரு கூட்டம் ஜனங்கள் முந்திக்கொண்டார்கள். "தாவீது ராஜா வருகிறார்" என்ற கரகோசம் வானளாவ எட்டியது!

இதேபோன்று, ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமாகிய இயேசு கிறிஸ்து திரும்ப வரும் பொழுது, அந்த காட்சியை எவ்வளவு மகிமையுள்ளதாக இருக்கும்!

பவுல் சொல்கிறார்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்... உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். (1 தெசலோனிக்கேயர் 4:16,17)
ராஜாதிராஜா வரப்போகிறதை, தீர்க்கதரிசன நிறைவேறுதல் நமக்குத் திட்டமாய் அறிவிக்கின்றன! ராஜாவை அழைத்து வர, நீங்கள் முந்திக்கொள்வீர்களாக! கிறிஸ்து ராஜாவை எதிர்கொண்டு அழைக்க ஆயிரமாயிரம் ஆத்துமாக்களை ஆதாயஞ் செய்வீர்களாக! ஆமென்..

வெளிப்படுத்தல் 11:15
"அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்"

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4