மஜோர்காவில் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா சென்ற பிரித்தானிய பெண் உயிரிழப்பு! கணவருக்கு ஆபத்தான நிலை

Nila
3 years ago
மஜோர்காவில் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா சென்ற பிரித்தானிய  பெண்  உயிரிழப்பு! கணவருக்கு ஆபத்தான நிலை

மஜோர்காவில் இடம்பெற்ற விபத்தில் சுற்றுலா சென்ற பிரித்தானியப் பெண் உயிரிழந்துள்ளதாகவும், அவரது கணவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தம்பதியினர் பால்மா கதீட்ரலுக்கு வெளியே பாதசாரி கடவை கடக்க காத்திருந்ததாக கூறப்படுகிறது.

உள்ளூர் நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி 35 வயதுடைய பெண் எனவும், பாதிக்கப்பட்ட இருவரும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்த நபர் பால்மாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணை உயிர்ப்பிக்க சம்பவ இடத்தில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது.

ஆம்புலன்ஸ்கள் மற்றும் உள்ளூர் பொலிசார் அவசர அழைப்புகளுக்கு பதிலளித்தனர். சம்பவம் தொடர்பில் உள்ளூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4