ஓமானில் உள்ள இலங்கை தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் தூதரகம்

Prasu
1 year ago
ஓமானில் உள்ள இலங்கை தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை மறுக்கும் தூதரகம்

ஓமானில் உள்ள இலங்கை தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை தூதரகம், மறுத்துள்ளது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் திகதி தூதரக வளாகத்தில் நடைபெற்ற பிரித் ஓதுதல் நிகழ்வு தொடர்பிலேயே இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஓமானில் உள்ள ஸ்ரீ சம்புத்த விகாரை ஆலயத்தின் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் ஓதுதல் நிகழ்வுச் செலவுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளே தூதரகம் மீது சுமத்தப்பட்டிருந்தன.

எனினும் இந்த நிகழ்வு தொடர்பான அனைத்து செலவுகளையும் ஸ்ரீ சம்புத்த விகாரை ஆலயத்தின் குழுவினரே ஏற்றுக்கொண்டதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரக வளாகத்தில் 'பிரித் மண்டபத்தை' நிறுவுவதற்கு மாத்திரமே தூதரகத்தின் உதவி வழங்கப்படடதாகவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், தூதரகம் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பன, இந்த நிகழ்வுக்கு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என்றும் ஓமானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஓமானில் நிர்க்கதியாகியுள்ள, இலங்கையைச் சேர்ந்த 283 வீட்டுப் பணிப்பெண்களை திருப்பி அனுப்ப ஓமன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முறையே 58 மற்றும் 22 பெண் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!