IPL ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன சாம் கர்ரன், கேமரூன் கிரீன்

#IPL
Prasu
3 years ago
IPL ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன சாம் கர்ரன், கேமரூன் கிரீன்

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று நடைபெறுகிறது. 

இதில், இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் கர்ரனை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. 

இடையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளும் போட்டி போட்டு ஏலம் கேட்டன. இறுதியாக, சாம் கர்ரனை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. 

இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை வாங்கவும் கடும் போட்டி இருந்தது. இறுதியில் அவரை ரூ.17.50 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 

சாம் கர்ரன் மற்றும் கேமரூன் கிரீன் இருவரும் இதுவரை நடந்த ஐபிஎல் ஏலத்திலேயே அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.  

  • சாம் கர்ரன் - ரூ.18.50 (பஞ்சாப் கிங்ஸ்) 
  • கேமரூன் கிரீன் - ரூ.17.50 (மும்பை இந்தியன்ஸ்) 
  • பென் ஸ்டோக்ஸ் - ரூ.16.25 (சென்னை சூப்பர் கிங்ஸ்) 
  • ஹாரி புரூக்- ரூ.13.25 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) 
  • ஜேசன் ஹோல்டர் - ரூ.5.75 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4