சுவிஸ் மற்றும் பிரான்ஸிற்கும் இடையிலான ரயில் பயணங்களை பாதித்த ரயில் சேவை வேலை நிறுத்தப் போராட்டம்

Prasu
3 years ago
சுவிஸ் மற்றும் பிரான்ஸிற்கும் இடையிலான ரயில் பயணங்களை பாதித்த ரயில் சேவை வேலை நிறுத்தப் போராட்டம்

பிரான்ஸில் முன்னெடுக்கப்பட உள்ள ரயில் சேவை வேலை நிறுத்தப் போராட்டம் சுவிட்சர்லாந்து பயணிகளையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. நாளைய தினம் முதல் எதிர்வரும் கிறிஸ்மஸ் தினம் வரையில் பிரான்ஸ் ரயில் சேவையின் சில பகுதிகளில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பண்டிகைக் காலத்தில் சுவிஸ் – பிரான்ஸிற்கும் இடையிலான ரயில் பயணங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சில முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் ரயில் சேவை பணியாளர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

வேலை நிறுத்தப் போராட்டத்தினால் பயணங்கள் ரத்தாகும் பயணிகள் கட்டணம் எதுவுமின்றி தங்களது டிக்கட்களை மாற்றிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4