இலங்கையில் இன்று முதல் அமுலாகும் வருமான வரி - வெளியான விபரம்!

#SriLanka #taxes #Salary
Nila
1 year ago
இலங்கையில் இன்று முதல் அமுலாகும் வருமான வரி - வெளியான விபரம்!

வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரித் திருத்தங்கள் உட்பட பல தீர்மானங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.

அதற்கமைய இன்று முதல் அமுலுக்கு வரும் மாதாந்த சம்பளத்திற்கும் தனிநபர் வருமான வரி விதிக்கப்படும்.

மாதாந்த சம்பளம் 150,000 ரூபாவாக இருந்தால் மாதாந்த வரியாக 3500 ரூபா அறவிடப்படும். மாதச் சம்பளம் 02 லட்சம் ரூபாய் என்றால், மாத வரித் தொகை 10,500ரூபாவாகும். 250,000 ரூபா மாதாந்த சம்பளம் பெறும் நபர் 21,000 ரூபாவையும், 300,000 ரூபா சம்பளம் பெறுபவர் 35,000 ரூபாவையும் வரியாக செலுத்த வேண்டும்

350,000 மாத சம்பளம் பெறுபவர் 52,500 ரூபாவையும், 04 லட்சம் ரூபா சம்பளம் பெறுபவர் 70,500 ரூபாவையும், 05 இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவர் 106,500 ரூபாவையும் வரியாக செலுத்த வேண்டும்.


மேலும், 750,000 ரூபா சம்பளம் பெறுபவர் மாதாந்தம் 196,500 ரூபாவை வரியாக செலுத்த வேண்டும், பத்து இலட்சம் ரூபா சம்பளம் பெறுபவரிடம் இருந்து பெறப்படும் வரித் தொகை 286,500 ரூபாவாகும்.

எவ்வாறாயினும், இன்று முதல் அமுலுக்கு வரும் தனிநபர் வருமான வரியானது ஒரு லட்சம் ரூபா வரை சம்பளம் பெறுபவர்களுக்கு அறவிடப்படாது எனவும் நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த வருமான வரியில் சில திருத்தங்கள் இருக்கும் எனவும் அது தரமான, பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி, விவசாய செயலாக்கம், கல்வி, சுற்றுலா, கட்டுமானம் மற்றும் சுகாதார சேவைகள் துறைகளுக்கு 30 சதவீதமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!