கஞ்சிபானி இம்ரான் தப்பிச் சென்றதற்கு புலனாய்வு அமைப்புகளில் ஏற்பட்ட பின்னடைவு காரணமா?
#India
Prathees
2 years ago

போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கஞ்சிபானி இம்ரான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போது இந்தியாவிற்கு தப்பிச் சென்றமை நாட்டின் புலனாய்வு அமைப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கஞ்சிபானி இம்ரான் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், அவரை அவதானமாக இருக்குமாறு தமிழக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



