இன்றைய வேத வசனம் 04.01.2023: நான் விசுவாசித் திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்

என் சொந்த கிராமத்தில் ஒரு குடும்பத்தார் நானும் எனது ஞாயிறு பள்ளி மாணவர்களும் அவர்களுடைய வீட்டைக் கடந்து செல்லும்போது, எங்களைக் கேலிசெய்து கூச்சலிடுவது வழக்கம்!
ஒருநாள் அந்த வீட்டைச் சேர்ந்த ஒரு பையன் ஞாயிறு பள்ளிக்கு வந்தான். அவன் பாடத்தைக் கவனிக்காமல் சத்தம்போட்டுக் கொண்டிருந்தான்.
அவன் போகும்போது, "நீ வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. மறுபடியும் வருவாய் என்று நம்புகிறேன்" என்று நான் கூறினேன்.
அடுத்த முறை வந்தபோதும், அவன் சத்தம் போட்டுக் கொண்டிருந்தான். நான் மறுபடியுமாக அதே வார்த்தைகளைக் கூறினேன்.
இறுதியாக ஒருநாள் அவன் “எனக்காக ஜெபியுங்கள்-” என்று கேட்டுக்கொண்டான். அன்று அவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டான்.
வீட்டுக்குச் சென்ற அவன் தான் செய்ததை மறைக்கவில்லை. அவன் கிறிஸ்துவை அறிக்கையிட்டான். விரைவிலேயே அந்த முழுக் குடும்பத்தாரும் தேவனுடைய ராஜ்யத்துக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடித்தார்கள்! ஆமென்!! அல்லேலூயா!!!
நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித் திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன் (#II_தீமோத்தேயு 1:12).



