அதிக வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு பராமரிப்பதால் ஏற்படும் ஆபத்து

இதற்கு முன்னர் குறைந்த வட்டியில் பெற்ற கடனுக்கான வட்டி வீதத்தை அதிகரிக்க இந்நாட்டு வங்கிகள் எடுத்த தீர்மானம் நியாயமானதல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் போது, முன்னர் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதத்தை குறைக்க இலங்கையின் வங்கித்துறை செயற்படவில்லை என பேராசிரியர் வசந்த அத்துகோரல சுட்டிக்காட்டினார்.
தற்போதைய உயர் வங்கி வட்டி விகிதங்களை நீண்டகாலமாக பேணுவது இந்நாட்டின் வர்த்தகத் துறையில் கடுமையான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என பேராசிரியர் வசந்த அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதுள்ள பணவீக்கம் மேலும் குறைவடையும் எனவும் எதிர்காலத்தில் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று தெரிவித்தார்.



