பொலிஸ் உத்தியோகத்தரால் ஷானியின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறித்து சிஐடி விசாரணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் கார் மீது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொரளை அல்விட்டிகல மாவத்தையில் உள்ள அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கடந்த டிசம்பர் 17ஆம் திகதி சுடப்பட்டது.
அப்போது காரில் யாரும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷானி அபேசேகர தமக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
தங்குமிடத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரின் கைகளில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



