யாழ்ப்பாணத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்: பொலிஸ் அதிகாரி கைது

#Police #Arrest #Jaffna
Prathees
3 years ago
யாழ்ப்பாணத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம்:  பொலிஸ் அதிகாரி  கைது

யாழ்ப்பாணத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசத்தில் சிறுமி ஒருவரை இரண்டு வருடங்களாக வன்புணர்வு செய்ததாக கூறப்படும் இரண்டு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களில் ஒருவர் நேற்று பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலில் சிறுமியை பலாத்காரம் செய்த இரண்டு  பொலிஸ் கான்ஸ்டபிள்களும் அந்த காட்சிகளை வீடியோ எடுத்து பின்னர் சிறுமியிடம் காட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த சிறுமி வைத்தியர் முன்னிலையில் சாட்சியமளிக்க வேண்டிய நிலையில் பருத்தித்துறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிய இந்த இரண்டு தமிழ் தேசிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த சிறுமி 16 வயதில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார், அவளுக்கு இப்போது 18 வயது.

திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக மருத்துவர் முடிவு செய்து, சிறுமியிடம் விசாரித்தபோது அனைத்து விவரங்களையும் மருத்துவரிடம் கூறியுள்ளார்.

இவ்வாறு தெரியவந்த தகவலை அறிந்த குடும்ப உறவினர்கள், பொலிசில் புகார் அளித்தனர்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது, ​​சிறுமியை முதன்முதலாக பாலியல் பலாத்காரம் செய்த போது எடுக்கப்பட்ட காணொளி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4