எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பினை ஏற்க முடியாது -ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி

எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டண அதிகரிப்பினை ஏற்க முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சி என்ற ரீதியில் மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு என்பனவற்றின் ஊடாக மக்கள் மீது சுமைகள் திணிக்கப்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி அநேகமான பகுதிகளில் தனித்து போட்டியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் இது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி அமைத்து அதன் ஊடாக தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.



