உள்ளூராட்சி தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம்

உள்ளூராட்சி தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது
மக்கள் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை எக்காரணம் கொண்டும் தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாலும் நீதிமன்றம் இது தொடர்பில் நியாயமான தீர்ப்பை வழங்கும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துவதை எதிர்ப்பது அரசாங்கமே தவிர மக்கள் அல்ல என முக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் நேற்று ஓய்வுபெற்ற இராணுவ கர்னல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மற்றும் அதன் உறுப்பினர்கள், பிரதமர் தினேஷ் குணவர்தன, நிதி அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்துவது தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளில் ஈடுபட அரசாங்கம் தயாராகி வருவதாகவும் தெரியவருகின்றது..



