ஷாஃப்டரின் கொலையாளியை நெருங்கும் பொலிஸார்.. ரத்தக்கறை படிந்த ஆடைகள், நகங்கள்!விசாரணைகள் தீவிரம்

#SriLanka #Police #Crime
Mayoorikka
1 year ago
ஷாஃப்டரின் கொலையாளியை நெருங்கும் பொலிஸார்.. ரத்தக்கறை படிந்த ஆடைகள், நகங்கள்!விசாரணைகள் தீவிரம்

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர்  தினேஷ் ஷாப்டரின் இரத்த மாதிரிகள், விரல் நகங்கள் மற்றும் உடல் பாகங்கள் மற்றும் குற்றம் நடந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில உள்ளூர் ஆதாரங்கள் ஆகியவற்றை டிஎன்ஏ பரிசோதனைக்காக அரசாங்க சோதனையாளருக்கு அனுப்ப கொழும்பு மேலதிக நீதவான் திருமதி ரஜீந்திர ஜயசூரிய உத்தரவு  வழங்கினார்.  

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் மனுவொன்றை முன்வைத்து விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பொரளை பொது மயானத்தில் ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர்  தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான அனைத்து விசாரணைகளும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பிரகாரம், இந்த மரணம் கொலையா? இது தற்கொலையா என்பதை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொரளை பொலிஸாருக்கு வயர் துண்டு, இரத்தக்கறை படிந்த துணி,  தினேஷ் ஷாஃப்டரின் விரல் நகங்கள், இரத்த மாதிரிகள் மற்றும் உள்ளூர் ஆதாரங்கள் என SOCO அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கிடைத்துள்ளன. 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம்,  பல உள்ளூர் சாட்சியங்களை ரசாயன  பரிசோதகர்க்கு அனுப்பி அறிக்கை மற்றும் டிஎன்ஏ அறிக்கையைப் பெறுவதற்கு நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கோரியது.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 124ஆவது பிரிவின் பிரகாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

கடந்த 15ஆம் திகதி ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர்  தினேஷ் ஷாப்டர் கொழும்பு 7, மல்பாறையில் உள்ள அவரது வீட்டிலிருந்து பொரளை பொது மயானத்திற்கு அழைத்து வந்து காருக்குள் கம்பியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பொரளை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். 

சம்பவம் தொடர்பான முதற்கட்ட தகவல்களின்படி, மூத்த கிரிக்கெட் வர்ணனையாளரான  பிரையன் தாமஸின் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகள், அவரது மனைவியின் தொலைபேசி பதிவுகள் மற்றும் நிறுவன இயக்குனரின் தொலைபேசி பதிவுகள் ஆகியவற்றை நீதிமன்றம் வரவழைத்துள்ளது.

பின்னர், பொரளை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, பிரையன் தோமஸ் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இது தொடர்பான விடயங்களை பரிசீலித்த நீதவான், வழக்குப் பொருட்களை பரிசோதித்து, ரசாயன பகுப்பாளியாரின்  அறிக்கை மற்றும் டி.என்.ஏ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு  உத்தரவிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!