இன்று நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைப்பு!
#SriLanka
#Bus
#Colombo
#prices
Mayoorikka
2 years ago

அதிவேக நெடுஞ்சாலை பேரூந்து கட்டணம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 10 வீதத்தால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொழும்பிற்கும் கதிர்காமத்திற்கும் இடையிலான அரை சொகுசு பேரூந்து சேவைகளை இன்று நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



