ரஷ்ய வீரர்களின் தொலைபேசி சிக்னல் மூலம் துல்லிய தாக்குதல் நடத்திய உக்ரைன்

#Ukraine #War #Attack #Russia #Death #Troops
Prasu
3 years ago
ரஷ்ய வீரர்களின் தொலைபேசி சிக்னல் மூலம் துல்லிய தாக்குதல் நடத்திய உக்ரைன்

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் உள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தில், ரஷிய படைகள் கைப்பற்றிய மகீவ்கா பகுதியில் ரஷிய வீரர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு இருந்தனர். 

அவர்கள் தங்கி இருந்த கட்டிடத்தின் மீது உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 89 ரஷிய வீரர்கள் பலியானார்கள். அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட அதி நவீன ஹிம்ராஸ் ரக ஏவுதள வாடம் மூலம் அந்த ஏவுகணைகள் வீசப்பட்டு துல்லிய தாக்குதல் 

உக்ரைன் தாக்குதலில் ரஷிய வீரர்கள் பலியானதை ரஷியாவும் ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் ரஷிய வீரர்கள் செல்போன்களை பயன் படுத்தியதால் அதன் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்து உள்ளது. 

இது தொடர்பாக அதிகாரிகள் கூறும் போது, உக்ரைனின் ஏவுகணை தாக்குதலில் 89 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தியதே முக்கிய காரணமாக அமைந்து விட்டது. 

செல்போன் சிக்னல் மூலம் வீரர்களின் இருப்பிடத்தின் தொலைவுகளை எதிரிகள் கண்காணித்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர் என்றனர். 

இந்த ஏவுகணை தாக்குதலில் ரஷியாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்து உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4