போதைப்பொருள் விநியோகத்திற்கு ஆதரவான பொலிஸ் அதிகாரிகளுக்கு நட்சத்திர விருந்து! காசு மாலைகளால் வரவேற்பு

கொழும்பை மையமாகக் கொண்ட போதைப்பொருள் வலையமைப்பின் இரண்டு விநியோக முகவர்கள், தங்களின் கொள்ளைக்கு ஆதரவான நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை இரவு விடுதிக்கு அழைத்து வந்து ஐம்பது ரூபா நாணயத்தாள்களால் மாலை அணிவித்து, அதிகாரிகளை வரவேற்று விருந்து வைத்துள்ளனர்.
நான்கு பொலிஸ் அதிகாரிகளை பாராட்டி நடத்தப்பட்ட இந்த விருந்தில் போதைப்பொருள் வியாபாரிகள் இருவரும் பத்து இலட்சம் ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிகாரிகள் விருந்துக்கு வந்தபோது, பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய கடத்தல்காரர் ரம்ஜான் தோளில் ஐம்பது ரூபா நோட்டுகளால் செய்யப்பட்ட மாலைகளை அணிவித்து வரவேற்றார்.
மாளிகாவத்தை கோட்டா நயீனின் சீடர்களான இந்த கடத்தல்காரர்கள் மருதானை மற்றும் கெசல்வத்தை பொலிஸ் பிரிவுகளை மையப்படுத்தி ஐஸ் மற்றும் ஹெரோயின் விநியோகம் செய்வதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள இரவு விடுதியொன்றில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக நடத்தப்பட்ட விருந்தின் இறுதியில், அவர்கள் எடுப்பதற்காகக் கூட்டத்தின் மேல் நாணயத் தாள்களை வீசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உணவு விநியோக நிறுவனம் என்ற போர்வையில் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை மொத்தமாக விற்பனை செய்து வருவது தெரியவந்துள்ளது.



