முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16வது பெனடிக்ட்டின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ
Prasu
2 years ago
முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆம் பெனடிக்ட் உயிர்நீர்த்ததையொட்டி அவருக்காக இரங்கல் தெரிவிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (05) கொழும்பிலுள்ள அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

இலங்கைக்கான வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.

இதையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைக்கப்பட்டுள்ள விசேட நூலில் குறிப்பொன்றையிட்டதுடன், திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்டின் புகைப்படத்திற்கும் அஞ்சலி செலுத்தினார்.



