ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிணை மனு நிராகரிப்பு!

#SriLanka #Easter Sunday Attack #release
Mayoorikka
3 years ago
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பிணை  மனு நிராகரிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு அன்று சதி மற்றும் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நவ்ஃபர் மவ்லவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளனர்.

தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற  நீதவான்கள்  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்த வேளையில் பிரதிவாதிகளை பிணையில் விடுவிப்பது பொருத்தமற்றது என நீதவான் தமித் தோட்டவத்த இந்த உத்தரவை அறிவித்தார். அதன்படி, கோரிக்கைகளை நிராகரிக்கிறோம் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

அதனையடுத்து வழக்கை மீண்டும் பெப்ரவரி 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4