2023 ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான குழுக்கள் தொடர்பான விபரங்களை அறிவித்துள்ள.பேரவையின் தலைவர் ஜெய் ஷா

Kanimoli
3 years ago
2023 ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான குழுக்கள் தொடர்பான விபரங்களை அறிவித்துள்ள.பேரவையின் தலைவர் ஜெய் ஷா

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 2023 ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான குழுக்கள் தொடர்பான விபரங்களை ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்.

போட்டியில் 6 அணிகள் பங்குபற்றுகின்றன. இதில் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஒரு குழுவாகவும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் தேர்ந்தெடுக்கப்படும் அணியும் மற்றைய குழுவில் இடம்பெறும்.

ஐக்கிய அரபு இராச்சியம், சிங்கப்பூர், ஹொங்கொங் மற்றும் குவைத் ஆகிய கிரிக்கெட் அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்கின்றன.

எனினும், 2023 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடத்தப்படும் இடம் தொடர்பில் குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய கிண்ணக் (ODI) கிரிக்கெட் தொடரில் மொத்தமாக 13 போட்டிகள் நடைபெறவுள்ளன.

குழுநிலை போட்டிகள், சுப்பர் 4 மற்றும் இறுதிப் போட்டி என்ற நிலைகளில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4