ஹிருணிகா அடிக்கடி ஆபாசமான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் கட்சியினர் எடுத்த முடிவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர அடிக்கடி ஊடகவியலாளர்கள் முன்னிலையில் ஆபாசமான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் கட்சியின் பொது பிரதிநிதிகள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொது விவாதங்களில் எப்போதும் அந்தரங்க உறுப்புகளைப் பற்றி அவர் கருத்து தெரிவிப்பது பொருத்தமானதல்ல என்று அவர்கள் வாதிட்டனர்.
ஊடகவியலாளர் மாநாடுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் பேசும் போது இவ்வாறான பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்வாதிகளை அநாகரீகமான வார்த்தைகளால் திட்டி வருவது தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்தனர்.
அரசியல் விமர்சனங்களைச் செய்வதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், அடிக்கடி தகாத வார்த்தைப் பிரயோகம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, கட்சித் தலைவரின் கருத்து குறித்து எச்சரிக்க இந்த குழு ஏற்கனவே முடிவு செய்துள்ளது.
அந்தரங்க பகுதிகளைப் பற்றிப் பேசுவது அவசியம் என்றால், கட்சி அலுவலகத்திலோ, கட்சிக் கூட்டங்களிலோ பேசாமல், தங்கள் வீட்டிலோ அல்லது வேறு இடத்திலோ செய்ய வேண்டும் என்றும் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், பல்வேறு போராட்டங்களின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அரவணைப்பு வழங்கப்படுவது குறித்தும், குறித்தும் இந்த எம்பிக்கள் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.



