நீதிமன்றத்தில் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்த அரசியல்வாதிக்கு வழங்கப்பட்ட தண்டனை!

#SriLanka #Sri Lanka President
Mayoorikka
1 year ago
நீதிமன்றத்தில் காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்த அரசியல்வாதிக்கு வழங்கப்பட்ட தண்டனை!

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் நிமல் அதிகாரி, நீதிமன்ற நடவடிக்கையின் போது அவமரியாதையான முறையில் கால்களை மடக்கி உட்கார்ந்து இருந்த குற்றச்சாட்டில் சில மணித்தியாலங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக பொலன்னறுவை நீதவான் நிமால் அதிகாரியை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அறைக்குள் வைத்ததாக லங்காதீப தெரிவித்துள்ளது.

தனது பிரதேச சபையின் மின்சார ஊழியர் மற்றும் மேலும் இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​அதி காரி நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ருஹுனுகெத்தவில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்காக சட்டவிரோதமான முறையில் மின்சாரம் எடுத்தமை தொடர்பில் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நிமால் அதிகாரி விசாரணைக்கு ஆஜராகியிருந்ததுடன், அவமரியாதையாக நடந்துகொண்டதால், மூன்று மணிநேர சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, நீதியரசரால் அறிவுறுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!