சொத்தி உபாலியின் இளைய மகன் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன்

இலங்கை பாதாள உலகில் பாரிய குற்றவாளியான சொத்தி உபாலி என்றழைக்கப்படும் ஆரம்பவெல டொன் உபாலி ரஞ்சித்தின் இளைய மகன் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொரளை பொலிஸாரால் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளையில் உள்ள சந்தேகநபரின் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிராம் ஹெரோயின், வாள், 2 கத்திகள் மற்றும் மற்றுமொரு கூரிய ஆயுதம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சொத்தி உபாலியின் மூத்த மகனும் கொலைச் சம்பவம் தொடர்பில் முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



