தலதா மாளிகையைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட செபால் அமரசிங்க கைது

தலதா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட செபால் அமரசிங்கவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பெல்லாங்வில பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பௌத்த மக்களால் மதிக்கப்படும் ஸ்ரீ தலதாவை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக செபால் அமரசிங்கவுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்இ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துஇ பொலிஸ்மா அதிபர் சி. டி.விக்கிரமரத்னவிடம் பரிந்துரைத்ததையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவுக்கு இது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



