தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

Kanimoli
3 years ago
 தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்  மீட்பு

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்றைய தினம் (05-01-2023) மீட்கப்பட்டுள்ளது.

மணற்காடு பழைய தேவாலயத்திற்கு பின்பாக உள்ள வீட்டில் வசித்துவந்த 56 வயதான கந்தசாமி பன்னீர்ச்செல்வம் என்பவரே இவ்வாறு சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

வீடொன்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாகவும், கிராம அலுவலரும் மக்களும் இணைந்து வீட்டைத் திறந்து பார்த்த போது சமையலறையில் உயிரிழந்த நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திறகுச் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை யாழ்.பருத்தித்துறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபரின் மனைவி 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்திருந்ததால், தனியாகவே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4